ஆன்மிகம்

அரியாங்குப்பம் அருகே பச்சைவாழியம்மன் கோவிலில் தீமிதி நிகழ்ச்சி

Published On 2016-08-27 02:54 GMT   |   Update On 2016-08-27 02:54 GMT
அரியாங்குப்பம் அருகே பச்சைவாழியம்மன் கோவிலில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தீமிதி நடந்தது.
புதுவை மாநிலம் அரியாங்குப்பம் அருகே டோல்கேட் பகுதியில் உள்ள மன்னாதசாமி பச்சைவாழியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் அம்மன் வீதிஉலா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தீமிதி நடந்தது. இதையொட்டி மதியம் திருக்கல்யாணம் நடைபெற்றது. மாலை 5 மணியளவில் கோவில் எதிரே தீக்குண்டம் அமைக்கப்பட்டு தீமிதி உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடனாக தீ மிதித்தனர். இன்று (சனிக்கிழமை) ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Similar News