ஆன்மிகம்

சிவன் கோவில்களில் சங்காபிஷேகம்

Published On 2016-12-07 12:19 IST   |   Update On 2016-12-07 12:19:00 IST
அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பத்தில் உள்ள தண்டேஸ்வரர் கோவிலில் 108 சங்குகள் வைத்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
கார்த்திகை மாதம் 3-வது சோமவாரத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பத்தில் உள்ள தண்டேஸ்வரர் கோவிலில் 108 சங்குகள் வைத்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

வில்லியனூர் அருகே உள்ள திருக்காஞ்சி கங்கவராகநதீஸ்வரர் கோவிலிலும் கார்த்திகை மாத 3-வது சோம வாரத்தையொட்டி 108 சங்காபிஷேக பூஜை நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல் புதுவை பகுதியில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில் சங்காபிஷேகம் நடைபெற்றது.

Similar News