வழிபாடு
கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
- தீமிதி திருவிழா வருகிற 12-ந்தேதி நடக்கிறது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
பாகூர் அருகே கன்னியக்கோவில் கிராமத்தில் பிரசித்திபெற்ற மன்னாதீஸ்வரர் உடனுறை பச்சைவாழியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தீமிதி திருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் செந்தில்குமார் எம்.எல்.ஏ. மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா வருகிற 12-ந்தேதி நடக்கிறது. விழாவில் புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் தனசேகரன், துணை தலைவர் ஜீவகணேஷ், செயலாளர் கலியபெருமாள், பொருளாளர் செந்தில்குமார், உறுப்பினர் கனகராஜ் ஆகியோர் செய்து வருகின்றனர்.