வழிபாடு

ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் திருவாதிரை விழா 6-ந்தேதி நடக்கிறது

Published On 2023-01-04 13:08 IST   |   Update On 2023-01-04 13:08:00 IST
  • சிதம்பரேஸ்வரர் வாகனத்தில் வீதி உலா வருதல் நடக்கிறது.
  • பெருமாள் சாமிக்கு பவுர்ணமி திருமஞ்சனம் நடக்கிறது.

ஆரல்வாய்மொழி பரகோடி கண்டன் சாஸ்தா மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் திருவாதிரை விழா வருகிற 6-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இதையொட்டி அன்று அதிகாலை 3 மணிக்கு விக்னேஸ்வரர் பூஜை, மகாகணபதி ஹோமம், ருத்ர ஹோமம், 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் கும்பாபிஷேகம் ஆகியவை நடக்கிறது.

காலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனை, தாண்டவ தீபாராதனை, கோபூஜை, பிரசாதம் வழங்குதல், 6.30 மணிக்கு நடராஜர் சாமி, சிவகாமி அம்மன், சிதம்பரேஸ்வரர் வாகனத்திலும், மாணிக்கவாசகர் பல்லக்கு வாகனத்திலும் வீதி உலா வருதல், 6.45 மணிக்கு பெருமாள் சாமிக்கு பவுர்ணமி திருமஞ்சனம், காலை 7 மணிக்கு பிரசாதம் வழங்குதல் தொடர்ந்து அன்னதானம் ஆகியவை நடைபெறும்.

பூஜைகளை கோவில் மேல்சாந்தி பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார் நடத்துகிறார். விழா ஏற்பாடுகளை கோவில் திருவாதிரை பக்தர் குழுவினர் செய்துள்ளனர்.

Similar News