வழிபாடு

தேவி கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 22-ந் தேதி நடக்கிறது

Published On 2023-05-20 07:53 GMT   |   Update On 2023-05-20 07:53 GMT
  • நாளை பல்வேறு யாகபூஜைகள் நடைபெறுகிறது.
  • 23-ந்தேதி அம்மன் வீதி உலா, உற்சவர் வீதிஉலா நடைபெறுகிறது.

மதுரை கான்பாளையம் குறுக்கு தெருவில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவிலின் கும்பாபிஷேகம் வருகிற 22-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. விழாவையொட்டி நேற்று பல்வேறு ஹோமங்களும், சிறப்பு பூஜைகளும் நடந்தது. இன்று பகவத் அனுக்ஞை, யஜமான சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி, அங்குராரப்பணம் நடக்கிறது.

நாளை(ஞாயிற்றுக்கிழமை) பல்வேறு யாகபூஜைகள் நடைபெறுகிறது. 22-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. மேலும் திருவிளக்கு பூஜை நடக்கிறது. 23-ந் தேதி அம்மன் வீதி உலா, உற்சவர் வீதிஉலா நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி இன்னிசை கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News