வழிபாடு

திருமலையில் இன்று கார்த்திகை வன போஜனம்

Published On 2022-11-13 01:30 GMT   |   Update On 2022-11-13 01:30 GMT
  • கார்த்திகை மாதத்தில் வனபோஜனம் நிகழ்ச்சி நடப்பது வழக்கம்.
  • இன்று கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் ரத்து செய்யப்படுகிறது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கார்த்திகை மாதத்தில் வனபோஜனம் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருமலையில் கோகர்ப்பம் அணை அருகில் உள்ள பார்வேடு மண்டபத்தில் கார்த்திகை வன போஜனம் நிகழ்ச்சி நடக்கிறது.

அதையொட்டி இன்று காலை 8.30 மணிக்கு உற்சவர் மலையப்பசாமி கோவிலில் இருந்து சிறிய கஜ வாகனத்திலும், உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் பல்லக்கிலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மேள, தாளம் மங்கள வாத்தியங்கள் இசைக்க கோவிலில் இருந்து ஊர்வலமாக பார்வேடு மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள்.

அங்கு பகல் 11 மணியில் இருந்து மதியம் 12 மணிக்குள் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது. மதியம் 1 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை கார்த்திகை வனபோஜனம் நிகழ்ச்சி நடக்கிறது.

இதனால் ஏழுமலையான் கோவிலில் இன்று கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்படுகிறது, எனக் கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News