வழிபாடு
கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
- தேர் திருவிழா 3-ந் தேதி நடக்கிறது.
- 4-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.
கொடுமுடியில் பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சித்திரை தேர் திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா 3-ந் தேதி நடக்கிறது. அன்று விநாயகர், சிவன் பெருமாள் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளுகிறார்கள். பின்னர் தேரோட்டம் நடைபெறுகிறது.
4-ந் தேதி சூலத் தேவர், சக்கரத்தாழ்வார் ஆகியோருக்கு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. 5-ந் தேதி சிவன் மற்றும் பெருமாள் உற்சவர்கள் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளியதும் விடையாத்தி உற்சவம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியுடன் தேர் திருவிழா நிறைவு பெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மற்றும் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.