வழிபாடு
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குழந்தைகளுக்கு பால்பாண்டி பெயர் வைக்கக்காரணம்...
- தென் மாவட்டங்களில் பால்பாண்டி என்ற பெயரை மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டும் வழக்கம் உள்ளது.
- பால்பாண்டி ஸ்ரீவைகுண்டம் தலத்து பெருமாளின் பெயராகும்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பால்பாண்டி என்ற பெயரை மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சூட்டும் வழக்கம் உள்ளது. இது ஸ்ரீவைகுண்டம் தலத்து பெருமாளின் பெயராகும். பல்லாண்டுகளுக்கு முன், திருக்குளந்தை கோயில் வழிபாடின்றி மறைந்து போனது. சுவாமி சிலையும் ஆற்றங்கரையில் ஓரிடத்தில் புதைந்திருந்தது.
இவ்வேளையில் இங்கு மேய்ச்சலுக்கு வந்த அரண்மனை பசு தொடர்ச்சியாக இங்கிருந்த புற்றில் பால் சுரந்தது. இதையறிந்து வந்த பாண்டிய மன்னன், அவ்விடத்தில் சுவாமி சிலை இருந்ததைக்கண்டு கோயில் எழுப்பினான். அன்றிலிருந்து தினமும் சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்து பூஜித்தான்.
இதை உணர்த்த தற்போதும் தினமும் காலையில் இவருக்கு பால் திருமஞ்சனம் அபிஷேகம் செய்யப்படுகிறது. பாண்டிய மன்னன் பால் அபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்தமையால் இந்த சுவாமிக்கும் "பால்பாண்டி" என்ற பெயர் ஏற்பட்டது.