வழிபாடு
முதன் முதலாக கிரிவலம் தொடங்க ஏற்ற மாதம் எது?
- திருவண்ணாமலைக்கு பவுர்ணமியன்று பக்தர்கள் கிரிவலம் செல்வது வாடிக்கை.
- கிரிவலம் செல்ல நினைத்து ஓர் அடி எடுத்து வைத்தால் முதல் அடிக்கு ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும்.
திருவண்ணாமலைக்கு மாதம் தோறும் பவுர்ணமியன்று பக்தர்கள் கிரிவலம் செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இதற்கு காரணம் சந்திரனின் 16 கலைகளும் பக்தர்களின் உடல் மீது படுவதால், மனோபலம் அதிகரிக்கிறது. மனோபலம் தரும் நம்பிக்கை காரணமாக அவர்கள் எடுத்த செயல்களில் வெற்றி அடைகிறார்கள்.
தாங்கள் தொடங்கும் செயல்களுக்கு அண்ணாமலையாரும், உண்ணாமுலையம்மனும் பூரண ஆசி தருவதாகக் கருதுகிறார்கள். பொதுவாக கிரிவலத்தை முதன் முதலாகத் தொடங்குவோர்கள் கார்த்திகை அல்லது மார்கழி மாதம் தொடங்குவது நல்லது. இந்த மாதங்களில் ஏதாவது ஒரு நாளில் திருவண்ணாமலையை ஒரே ஒரு முறை வலம் வந்தாலும், அந்த ஆண்டு முழுவதும் கிரிவலம் செய்த பலனை அடைவர்.