வழிபாடு

விருத்தாசலம் விருத்தாம்பிகை அம்மன் கோவில் ஆடிப்பூர விழா நாளை தொடங்குகிறது

Published On 2022-07-22 03:57 GMT   |   Update On 2022-07-22 03:57 GMT
  • வருகிற 31-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
  • 2-ந்தேதி ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.

விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற பாலாம்பிகை, விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் விருத்தாம்பிகை அம்மனுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடிப்பூர விழா 11 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர விழா நாளை (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு அம்மன் சன்னதியில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. விழாவை முன்னிட்டு தினந்தோறும் காலை, இரவு நேரங்களில் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 31-ந்தேதியும், ஆகஸ்டு 1-ந் தேதி ஸ்படிக பல்லக்கு நிகழ்ச்சியும், 2-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் திருமாங்கல்யதாரணம் என்ற ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News