பொது மருத்துவம்
தினமும் சிக்கன் சாப்பிட்டால் மூட்டு பிரச்சனை ஏற்படும்- டாக்டர்கள் எச்சரிக்கை
- தினமும் சிக்கன் சாப்பிட்டால் உடல்நல பாதிப்புகள் ஏற்படும்.
- சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் சிக்கன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அசைவ பிரியர்கள் அனைவருமே சிக்கன் சாப்பிடுவது வழக்கம். அவர்களுக்கு சிக்கன் மிகவும் பிடித்த உணவாகவும் இருக்கும். ஆனால் தினமும் சிக்கன் சாப்பிட்டால் உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
தினமும் சிக்கன் சாப்பிடுவதால் உடலில் யூரிக் அமிலம் அதிகரித்து எலும்பு, மூட்டு பிரச்சனைகள் ஏற்படும் என்றும், இதய நோய் வர வாய்ப்புள்ளது என்றும் டாக்டர்கள் கூறுகிறார்கள்.
சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் சிக்கன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.