செய்திகள்
தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தயாராகிறது- கூட்டணி பற்றி முடிவு செய்ய குழு
பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தயாராகி வருகிறது. இதற்காக உயர்மட்ட குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
பாராளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து மத்திய அரசு அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்டு வருகிறது.
இதற்கு அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும்போது தமிழகம் உள்பட சில மாநிலங்களில் ஆட்சிகள் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது. இதனால் மேலும் 3 ஆண்டு காலம் பதவி பறிபோவதால் அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கிறது.
ஆனால் மத்திய அரசு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் உறுதியாக உள்ளது. அதனால் பாராளுமன்ற தேர்தல் நடக்கும்போது சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது.
இதுபற்றி நேற்று அ.தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். மேலும் டிசம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடத்துவதற்கு பா.ஜனதா அரசு திட்டமிட்டு இருப்பதாகவும் எனவே பிரச்சனைகளுக்காக குரல் எழுப்ப வேண்டும். மாநில உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளில் எந்த சமரசமும் செய்து கொள்ள வேண்டாம் என்றும் எடப்பாடி பழனிசாமி பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பா.ஜனதா அணியில் இணையலாம் என்று சிலரும், பா.ஜனதா அணியில் இணையக்கூடாது சிலரும், ஜெயலலிதா பாணியில் தனித்தே போட்டியிட வேண்டும் என்றும் பெரும்பாலானவர்களும் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து தேர்தல் கூட்டணி உள்பட முக்கிய விஷயங்களில் முடிவுகள் எடுக்க உயர்நிலை குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரது கருத்துக்களை பெற்று உயர்நிலைக் குழுவானது முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.
சமீப காலமாக பா.ஜனதாவுக்கும் அ.தி.மு.க.வுக்கும் உறவு சுமூகமாக இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் மத்திய அரசு மிகவும் காலதாமதம் செய்து விட்டதாக அ.தி.மு.க. தரப்பில் கருத்து நிலவுகிறது.
இதே போல் நீட் தேர்வு விஷயத்திலும் தமிழக அரசுக்கு எதிராக மத்திய அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளது. இது மக்கள் மத்தியில் தமிழக அரசு மீது அதிருப்தி ஏற்படச் செய்துள்ளது.
மேலும் தமிழகத்தில் நடைபெறும் தொடர்ச்சியான வருமான வரி சோதனைகளும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இவற்றுக்கெல்லாம் மேலாக ஊழலில் நாட்டிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் இருப்பதாக அமித்ஷா பேசிய பேச்சு அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க.வுக்கு எதிராக பா.ஜனதா நிர்வாகிகள், மத்திய மந்திரிகள் ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறி வருகிறார்கள். எனவே கூட்டணி தொடர்பான அ.தி.மு.க. நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் கருத்து நிலவுகிறது.
கூட்டத்தில் மொத்தம் உள்ள 50 எம்.பி.க்களில் 40 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 3 பேர் தினகரன் ஆதரவு எம்.பி.க்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
துணை சபாநாயகர் தம்பித்துரை, அன்வர் ராஜா, எஸ்.ஆர்.பாலசுப்பிர மணியன், சத்யபாமா உள்பட 8 எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. #ADMK