வர்த்தக போர் ஏற்படும் சூழல்.. சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தை
- சர்வதேச அளவில் வர்த்தக போர் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது.
- இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடங்கியுள்ளன.
பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று (வெள்ளிக்கிழமை) காலை சரிவுடன் தொடங்கியது. சர்வதேச அளவில் வர்த்தக போர் ஏற்படும் சூழல் உருவாகி இருப்பதை தொடர்ந்து இந்திய பங்குச் சந்தைகள் காலையிலேயே சரிவை சந்தித்துள்ளன.
பி.எஸ்.இ. பென்ச்மார்க் குறியீடான சென்செக்ஸ் 243.51 புள்ளிகள் சரிந்து 74,096.58 புள்ளிகளையும், என்.எஸ்.இ. நிஃப்டி 53.35 புள்ளிகள் சரிந்து 22,491.35 ஆக உள்ளது.
சென்செக்ஸ்-ஐ பொருத்தவரை இண்டஸ்இண்ட் வங்கி, என்.டி.பி.சி., ஹெச்.சி.எல். டெக்னாலஜீஸ், டெக் மஹிந்திரா, ஜொமாட்டோ, பவர் க்ரிட், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, இன்ஃபோசிஸ், ஐ.டி.சி., இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் பின்தங்கியுள்ளன.
மறுபுறம் டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீல், டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ், லார்சன் அண்ட் டூப்ரோ மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்ளிட்டவை லாபம் ஈட்டியுள்ளன.