வணிகம் & தங்கம் விலை
null
பெயர் மற்றும் லோகோவை மாற்றிய சொமேட்டோ
- மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்படும் நிறுவனங்களாக சொமேட்டோ, ஸ்விக்கி நிறுவனங்கள் உள்ளன.
- தீபிந்தர் கோயல் தலைமையிலான இந்நிறுவனத்தின் பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் நினைத்ததை நினைத்த நேரத்தில் வீடுகளில் இருந்து ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் வழக்கம் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ற வகையில் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு இயங்கி வருகின்றன. பெரும்பாலும் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்படும் நிறுவனங்களாக சொமேட்டோ, ஸ்விக்கி நிறுவனங்கள் உள்ளன.
இந்த நிலையில், சொமேட்டோ நிறுவனம் அதன் பெயரை எட்டர்னல் (Eternal) என மாற்றுவதாக அறிவித்துள்ளது. மேலும் புதிய லோகோவையும் வெளியிட்டுள்ளது.
தீபிந்தர் கோயல் தலைமையிலான இந்நிறுவனத்தின் பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பங்குதாரர்களும் இந்த மாற்றத்தை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என நிறுவனத் தலைவர் தீபிந்தர் கோயல் கடிதம் எழுதியுள்ளார்.