வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு
- சிலிண்டர் விலை குறைவு காரணமாக வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
சென்னை:
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துவிட்டது.
இதனையடுத்து மாதந்தோறும் இந்நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கும். அந்த வகையில் தற்போது வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை ரூ.6.50 குறைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.6.50 குறைந்து ரூ.1959.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த புதிய விலை இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. சிலிண்டர் விலை குறைவு காரணமாக வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. 14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.818.50-க்கு ஆக நீடிக்கிறது.