வணிகம் & தங்கம் விலை

புதிய உச்சத்தில் உயரும் தங்கம் தங்கம் விலை- இன்றைய நிலவரம்

Published On 2025-01-24 09:44 IST   |   Update On 2025-01-24 09:44:00 IST
  • வெள்ளி விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.
  • பார் வெள்ளி ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை:

கடந்த ஆண்டு ஜூலையில் ஆபரணத்தங்கத்தின் மீதான இறக்குவதி வரி குறைக்கப்பட்டதால் சவரன் ரூ.51,000-க்கு கீழ் சென்ற தங்கத்தின் விலை மீண்டும் படிப்படியாக உயர்ந்து நேற்று சவரனுக்கு ரூ.60,200-க்கு விற்பனையானது. தங்கத்தின் விலை கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சவரனுக்கு ரூ15,000 வரை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து நேற்று தங்கத்தின் விலை மாற்றமில்லாமல் ஒரு சவரன் ரூ.60,200-க்கு விற்பனையானது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.60,440-க்கும், கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,555-க்கும் விற்பனையாகிறது.

 கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1800 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


கடந்த சில நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 105 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

23-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,200

22-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 60,200

21-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 59,600

20-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 59,600

19-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 59,480

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

23-01-2025- ஒரு கிராம் ரூ. 104

22-01-2025- ஒரு கிராம் ரூ. 104

21-01-2025- ஒரு கிராம் ரூ. 104

20-01-2025- ஒரு கிராம் ரூ. 104

19-01-2025- ஒரு கிராம் ரூ. 104

Tags:    

Similar News