3-வது காலாண்டில் 6,806 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய இன்ஃபோசிஸ் நிறுவனம்
- 2023-24 நிதியாண்டின் 3-வது காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வருவாய் 38,821 கோடி ரூபாய்.
- 2024-2025 நிதியாண்டின் 3-வது காலாண்டில் 41,764 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 7.58 சதவீதம் அதிகமாகும்.
ஐ.டி. துறையின் முன்னணி சேவை நிறுவனமாக இன்ஃபோசிஸ் திகழ்ந்து வருகிறது. இந்த நிறுவனம் 2024-25 நிதியாண்டின் 3-வது காலாண்டில் 6,806 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாக தெரிவித்துள்ளது.
2023-24 நிதியாண்டின் 3-வது காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வருவாய் 38,821 கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 41,764 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 7.58 சதவீதம் அதிகமாகும்.
மேலும், நிதி சேவைகள் மற்றும் உற்பத்தி துறைகள் மூலமாக 27.8 சதவீதம் வருமானமும், சில்லறை விற்பனை மற்றும் எரிசக்தி துறைகள் மூலம் 15.5 சதவீதம் வருமானமும் ஈட்டப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் ஐரோப்பியாவில் வருடா வருடம் இரண்டு இலக்க வளர்ச்சியை பெற்றுள்ளது. வட அமெரிக்காவில் 5 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. இந்த நிதியாண்டில் அமெரிக்காவில் வலுவான வளர்ச்சியை பெற்று வருவதாக தெரிவித்துள்ளது.
இந்த காலாண்டில் 5,591 பணியாளர்களை பணியமர்த்தியுள்ளது. மொத்தம் பணியாளர்களின் எண்ணிக்கை 3,23,379 ஆகும்.
இந்த நிதியாண்டுக்குள் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பணியமர்த்துவோம். 2026 நிதியாண்டில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய பணியாளர்களை எதிர்பார்க்கிறோம் என இன்ஃபோசிஸ் தலைமை நிதி அதிகாரி ஜயேஷ் சங்ராஜ்கா தெரிவித்துள்ளார்.