வணிகம் & தங்கம் விலை

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 241.30 புள்ளிகள் வீழ்ச்சி

Published On 2025-01-10 16:44 IST   |   Update On 2025-01-10 16:44:00 IST
  • டி.சி.எஸ்., பாரதி ஏர்டெல், இன்போசிஸ், இந்துஸ்தான் யுனிலிவர் பங்குகள் ஏற்றம்.
  • டைட்டன், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், மாருதி சுசுகி, கோடக் மஹிந்திரா பேங்க், டாடா மோட்டார்ஸ் பங்குகள் சரிவு.

மும்பை பங்குச் சந்தை குறியீடு சென்செக்ஸ் 241.30 புள்ளிகள குறைந்து சென்செக்ஸ் 77,378.91 புள்ளிகளில் இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது.

நேற்று சென்செக்ஸ் 77,620.21 புள்ளிகளில் மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 77,882.59 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. சற்று நேரத்தில் சரிவை சநித்தது. பின்னர் மெல்லமெல்ல சற்று உயர்வை சந்தித்த வர்த்தகம் இறுதியாக 241.40 புள்ளிகள் சரிந்து 77,378.91 புள்ளிகளில் நிறைவடைந்தது.

இன்று குறைந்தபட்சமாக 77,099.55 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 77,919.70 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது.

நிஃப்டி

இந்திய பங்குச் சந்தை குறியீடு நிஃப்டியும் இன்று 86.50 புள்ளிகள் சரிவடைந்து 23,440 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

நேற்று நிஃப்டி 23,526.50 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 23,551.90 புள்ளிகளில் தொடங்கிய வர்த்தகம் குறைந்த பட்சமாக 23,344.35 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 23,596.60 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 86.50 புள்ளிகள் குறைந்து 23,440.00 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

டாலருக்கு நிகரான இந்தியாவின் பண மதிப்பு 14 பைசா குறைந்து இதுவரை இல்லாத அளவிற்கு 88 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

ஏற்றம் கண்ட பங்குகள்

30 பங்குகளை அடிப்படையாக கொண்டு இயங்கும் மும்பை பங்குச் சந்தையின் இன்றைய வர்த்தகத்தில் டி.சி.எஸ்., பாரதி ஏர்டெல், இன்போசிஸ், இந்துஸ்தான் யுனிலிவர், ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், எல் அண்டு டி, பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்செர்வ், டெக் மஹிந்திரா பங்குகள் மட்டுமே ஏற்றம் கண்டன

வீழ்ச்சி கண்ட பங்குகள்

டைட்டன், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், மாருதி சுசுகி, கோடக் மஹிந்திரா பேங்க், என்.டி.பி.சி., பவர் கிரிட் கார்ப், டாடா மோட்டார்ஸ், நெஸ்ட்லே இந்தியா, டாடா ஸ்டீல், இந்துஸ்இண்ட் பேங்க், ஆசியன் பெயிண்ட்ஸ், அதானி போர்ட்ஸ், சொமேட்டோ, ஆக்சிஸ் பேங்க், அல்ட்ராடெக் சிமெண்ட், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, சன் பார்மாசெயுட்டிகள், ஐ.டி.சி., எஸ்.பி.ஐ., ஐசிஐசிஐ பேங்க், ஹெச்.டி.டிஃப்.சி பேங்க் ஆகிய நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.

Tags:    

Similar News