வணிகம் & தங்கம் விலை

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: 3 நாட்களில் சவரன் ரூ.1200 உயர்வு- இன்றைய நிலவரம்

Published On 2025-01-03 04:22 GMT   |   Update On 2025-01-03 04:28 GMT
  • நேற்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,440-க்கும் விற்பனையானது.
  • வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது.

சென்னை:

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மாற்றமில்லாமல் ஏறுவதும், குறைவதுமாக இருந்தது. நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,200-க்கும், நேற்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,440-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், மூன்றாவது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,080-க்கும் கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,260-க்கும் விற்பனையாகிறது.

ஆங்கில புத்தாண்டு 3நாட்களே ஆகும் நிலையில் தங்கம் சவரனுக்கு ரூ.1200 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

02-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,440

01-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,200

31-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,880

30-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,200

29-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,080

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

02-01-2025- ஒரு கிராம் ரூ. 99

01-01-2025- ஒரு கிராம் ரூ. 98

31-12-2024- ஒரு கிராம் ரூ. 98

30-12-2024- ஒரு கிராம் ரூ. 100

29-12-2024- ஒரு கிராம் ரூ. 100

Tags:    

Similar News