வணிகம் & தங்கம் விலை

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு

Published On 2025-01-01 01:40 GMT   |   Update On 2025-01-01 01:55 GMT
  • 14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.818.50 ஆக நீடிக்கிறது.
  • கடந்த 3 மாதங்களாக வணிக சிலிண்டர்களின் விலை உயர்ந்து வந்த நிலையில் இந்த மாதம் குறைந்துள்ளது.

சென்னை:

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துவிட்டது.

இதனையடுத்து மாதந்தோறும் இந்நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கும். அந்த வகையில் தற்போது வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை ரூ.14.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.14.50 குறைந்து ரூ. ரூ.1,966-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 14.2 கிலோ வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.818.50 ஆக நீடிக்கிறது.

கடந்த 3 மாதங்களாக வணிக சிலிண்டர்களின் விலை உயர்ந்து வந்த நிலையில் இந்த மாதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News