புத்தாண்டில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை- இன்றைய நிலவரம்
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- ஒரு கிராம் வெள்ளி 98 ரூபாய்க்கும், பார் வெள்ளி 98 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் பெரிய அளவில் மாற்றமில்லாமல் ஏறுவதும், குறைவதுமாக இருந்தது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான நேற்றுமுன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,200-க்கும் நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.56,880-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், 2025-ம் ஆண்டின் தொடக்க நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,200-க்கும் கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,150-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 98 ரூபாய்க்கும், பார் வெள்ளி 98 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
31-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,880
30-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,200
29-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,080
28-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,080
27-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,200
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
31-12-2024- ஒரு கிராம் ரூ. 98
30-12-2024- ஒரு கிராம் ரூ. 100
29-12-2024- ஒரு கிராம் ரூ. 100
28-12-2024- ஒரு கிராம் ரூ. 100
27-12-2024- ஒரு கிராம் ரூ. 100