டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி: இன்று காலை 11 பைசா குறைந்து ரூ. 85.75 ஆனது
- கடந்த மாதம் 27-ந்தேதி இதுவரை இல்லாத அளவில் 85.80 ரூபாய் அளவிற்கு வீழ்ச்சியை சந்தித்தது.
- 85.64 ரூபாயாக இருந்த நிலையில் இன்று காலை 11 பைசா குறைந்து 85.75 ஆக உள்ளது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீச்சியை கண்டு வரும் நிலையில் இன்று காலை 11 பைசா குறைந்து 85.75 ரூபாயாய உள்ளது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த ஆண்டு மிகவும் மோசமான வகையில் சரிந்து காணப்பட்டது. 2025-ம் ஆண்டு பிறந்த நிலையிலும் சரிவு தொடர்ந்து நீடிக்கிறது. நேற்று 85.64 ரூபாயாக இருந்தது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி (interbank foreign exchange) ஓபனில் இந்திய ரூபாயின் மதிப்பு 85.69 ரூபாயாக இருந்தது. பின்னர் நேற்றைய மதிப்பை விட 11 பைசா குறைந்து 85.75 ரூபாயாக குறைந்தது. கடந்த மாதம் 27-ந்தேதி இதுவரை இல்லாத அளவில் 85.80 ரூபாய் அளவிற்கு சரிவை கண்டது.
2024-ம் ஆண்டில் பெரும்பாலான நாட்டின் நாணயங்களுக்கு நிகரான டாலர் மதிப்பு உயர்ந்ததாகவும், இந்த ஆண்டு தொடர்ந்து வலுவான நிலையில் இருப்பதாகவும் அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வெளிநாட்டு நிதி வெளியேற்றம் மற்றும் அமெரிக்க நாணய மதிப்பு உயர்வு ஆகியவற்றின் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்து வருகிறது.
டொனால்டு டிரம்ப் அதிபராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து சரிந்த வண்ணம் உள்ளது.