வணிகம் & தங்கம் விலை

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1,258 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் நிறைவு

Published On 2025-01-06 17:07 IST   |   Update On 2025-01-06 17:07:00 IST
  • ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், டைட்டன் ஆகிய இரண்டு நிறுவன பங்குகள் சற்று ஏற்றம் கண்டன.
  • மும்பை பங்குச் சந்தையின் முக்கியமான 28 நிறுவன பங்குகள் இன்று சரிவை சந்தித்தன.

மும்பை பங்குச் சந்தை குறியீடு சென்செக்ஸ் 1,258.12 புள்ளிகள் குறைந்து இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் 79,223.11 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

இன்று காலை 58 புள்ளிகள் உயர்ந்து 79,281.65 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று குறைந்த பட்சமாக 77,781.62 புள்ளிகளிலும், அதிக பட்சமாக 79,532.67 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது. இறுதியாக 1,258.12 புள்ளிகள் சரிந்து சென்செக்ஸ் 77964.99 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

இந்திய பங்குச் சந்தை குறியீடு நிஃப்டியும் இன்று 388.70 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் நிறைவடைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை 24,004.75 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

 இன்று காலை நிஃப்டி 41 புள்ளிகள் உயர்நது 24,045.80 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. அதிக பட்சமாக 24,089.95 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 23,551.90 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 338.70 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 23616.05 புள்ளிகளில் இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது.

ஏற்றம் கண்ட பங்குகள்

30 பங்குகளை அடிப்படையாக கொண்டு இயங்கும் மும்பை பங்குச் சந்தையின் இன்றைய வர்த்தகத்தில் ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், டைட்டன் ஆகிய இரண்டு நிறுவன பங்குகள் மட்டுமே சற்று ஏற்றம் கண்டன.

வீழ்ச்சி கண்ட பங்குகள்

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், இந்துஸ்தான் யுனிலிவர், பஜாஜ் பைனான்ஸ், மாருதி சுசுகி, கோடக் மஹிந்திரா பேங்க், என்.டி.பி.சி., டைட்டன், பவர் கிரிட் கார்ப், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் பின்செர்வ், நெஸ்ட்லே இந்தியா, டாடா ஸ்டீல், இந்துஸ்இண்ட் பேங்க் டெக் மஹிந்திரா, ஆசியன் பெயிண்ட்ஸ், அதானி போர்ட்ஸ், சொமேட்டோ, ஆக்சிஸ் பேங்க், அல்ட்ராடெக் சிமெண்ட், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, சன் பார்மாசெயுட்டிகள், எல் அண்டு டி, ஹெச்.சி.எல். டெக்னாலாஜிஸ், ஐ.டி.சி., எஸ்.பி.ஐ., இன்போசிஸ், ஐசிஐசிஐ பேங்க், பாரதி ஏர்டெல், ஹெச்.டி.டிஃப்.சி பேங்க், டி.சி.எஸ். ஆகிய 28 நிறுவுன பங்குகள் சரிவை சந்தித்தன.

இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்றைய வர்த்தகத்தில் 3 பைசா வீழ்ச்சி கண்டு இது வரை இல்லாத அளவிற்கு 85.82 ரூபாயாக அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News