வணிகம் & தங்கம் விலை
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி: ரூ 86.31 ஆக உள்ளது
- சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, தொடர்ந்து வெளியேறும் வெளிநாட்டு மூலதனம் வீழ்ச்சிக் காரணம்.
- வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி மாற்றத்தின் வர்த்தக தொடக்கத்தில் 27 பைசா குறைந்துள்ளது.
வாரத்தின் முதல் நாளான இன்றைய வர்த்தகம் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 27 பைசா குறைந்து இதுவரை இல்லாத அளவிற்கு 86.31 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, தொடர்ந்து வெளியேறும் வெளிநாட்டு மூலதனம் மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தையில் வெளிப்படும் எதிர்மறையான டிரெண்ட் ஆகியவை இந்திய பண வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு வளர்ச்சியால் சந்தையில் எதிர்பார்த்ததை விட டாலர் மதிப்பு வலுப்பெற்றதாகவும் கூறப்படுகிறது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி மாற்றத்தில், இன்று காலை வர்த்தகத்தில் டாலருக்கு இணையான இந்திய ரூபாய் 86.12 ஆக தொடங்கியது. பின்னர் 27 பைசா சரிந்து 86.31 ரூபாய இருந்தது. இது முந்தைய நாள் வர்த்தக முடிவில் இருந்து இது 27 பைசா சரிவாகும்.