செய்திகள்
கோப்பு படம்

அம்மா சிமெண்ட் மூடைகளை கூடுதல் விலைக்கு விற்ற 2 பேர் கைது

Published On 2019-11-26 16:51 IST   |   Update On 2019-11-26 16:51:00 IST
ஆண்டிப்பட்டி அருகே அம்மா சிமெண்ட் மூடைகளை ஏமாற்றி வாங்கி கூடுதல் விலைக்கு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகில் உள்ள வருசநாடு பகுதியை சேர்ந்தவர் பாண்டி (வயது42). இவர் உசிலம்பட்டியில் அம்மா சிமெண்ட் விற்பனை பிரதிநிதியாக உள்ளார். இவரிடம் பால்பாண்டி (37), பரமசிவம் (42) ஆகிய 2 பேரும் அரசு வழங்கும் அம்மா சிமெண்ட் மூடைகளை மானிய விலையில் வாங்கி உள்ளனர்.

வெவ்வேறு பெயர்களை பயன்படுத்தி சிமெண்ட் மூடைகளை வாங்கிய இவர்கள் அதனை வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்துள்ளனர். இது குறித்து பாண்டி வருசநாடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் பால்பாண்டி மற்றும் பரமசிவத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News