செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 13,660 ஆக உயர்வு

Published On 2020-09-01 06:42 IST   |   Update On 2020-09-01 06:42:00 IST
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 67 ஆயிரத்து 123 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 13,558பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. 6,713 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. 11,982 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 3 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களில் 97 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 185 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. சிவகாசி ஈஞ்சார் விலக்கை சேர்ந்த 50 வயது பெண்,ஆனையூரை சேர்ந்த 40 வயது பெண், ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த 33 வயது பெண், 38வயது நபர், காமராஜர் காலனியை சேர்ந்த 26 வயது பெண், ராதாகிருஷ்ணன் காலனியை சேர்ந்த 20 வயது பெண், விஸ்வநத்தத்தை சேர்ந்த 50 வயது பெண், திருத்தங்கல் பாண்டியன்நகரை சேர்ந்த 33 வயது நபர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சாத்தூர், பேர்நாயக்கன்பட்டி, ராமச்சந்திராபுரம், ஆசில்லாபுரம், திருச்சுழி, புல்வாய்கரை, வரிசையூர், லட்சுமியாபுரம், பொய்யாங்குளம், வன்னியம்பட்டி, புதுகிராமம், வி.முத்துலிங்காபுரத்தை சேர்ந்த 3 பேர், சிந்தநாயக்கன்பட்டி, மங்களம், ராஜபாளையத்தை சேர்ந்த 9 பேர், வி.கரிசல்குளத்தை சேர்ந்த 5 பேர், விருதுநகர் ஐ.டி.பி.டி.காலனியை சேர்ந்த 23 வயது நபர் உள்பட 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 13,660 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து தினசரி 5 ஆயிரம் பேருக்கு மேல் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் முடிவுகள் தெரிவிக்கப்படவேண்டிய பரிசோதனைகள் தேக்கம் அடைந்து வருகின்றன. இந்தநிலையில் கொரோனாவுக்கு நேற்று ஒருவர் பலியானார். இதையடுத்து கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 201 ஆக உயர்ந்துள்ளது. முதல்-அமைச்சர் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 100 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அலுவலகங்களிலும், நிறுவனங்களிலும் கொரோனா தடுப்பு அலுவலர்களை நியமிக்க அரசு அறிவுறுத்தியப்படி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுபோக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்துகழக நிர்வாகமும், தனியார் பஸ் நிறுவனங்களும் அரசு தெரிவித்துள்ள வழிக்காட்டுதல் நெறிமுறைகளின்படி குறிப்பிட்ட எண்ணிக்கையில் பாதுகாப்பான முறையில் பஸ்கள் இயக்கப்படுவதை மாவட்ட நிர்வாகமும், போலீஸ் நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டியது அவசியம் ஆகும். உள்ளாட்சி அமைப்புகள் பஸ் நிலையங்களில் கிருமிநாசினி தெளித்து தூய்மைப் படுத்த வேண்டியதும் மிக அவசியம் ஆகும். இல்லையேல் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுவிடும்.

Similar News