செய்திகள்
கொரோனா பரிசோதனை கோப்புப்படம்

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா

Published On 2020-10-07 07:56 IST   |   Update On 2020-10-07 07:56:00 IST
மாவட்டத்தில் நேற்று மேலும் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 2 லட்சத்து 43 ஆயிரத்து 832 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 15 ஆயிரத்து 539 பேருக்கு கொரோனா உறுதியானது.

4 ஆயிரத்து 32 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. 14 ஆயிரத்து 170 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஒரு முகாமில் 14 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 84 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் காந்தி நகரை சேர்ந்த 74 வயது முதியவர், சூலக்கரை வ.உ.சி. நகரை சேர்ந்த 42 வயது பெண், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த 53 வயது நபர், நடையனேரியை சேர்ந்த 58 வயது நபர், முதலிபட்டியை சேர்ந்த 58 வயது நபர், செவலூரை சேர்ந்த 17 வயது சிறுமி, 31 வயது பெண், ஆமத்தூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 53 வயது நபர், சேத்தூர், ராஜபாளையம், படந்தால், சின்ன ஓடைப்பட்டி, விருதுநகர் காந்தி நகரை சேர்ந்த 48 வயது நபர் உள்பட மாவட்டம் முழுவதும் 23 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,562 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 347 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 4 ஆயிரத்து 532 பேருக்கு முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. கடந்த 3-ந் தேதி மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள் நேற்று தான் வெளியானது.

பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஆகும் நிலை தொடர்ந்து நிலவுகிறது. எனவே இந்த தாமதத்தை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Similar News