உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் அதிகாரி அறிவுறுத்தல்

Published On 2022-01-30 04:46 GMT   |   Update On 2022-01-30 04:46 GMT
சிறுதானிய சாகுபடி குறித்த விளக்கக் கையேடு வெளியிடப்பட்டது.
திருப்பூர்:

பொங்கலூர் அருகே மந்திரிபாளையத்தில் சிறுதானியங்கள் அபிவிருத்திக்காக விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது. 

மாவட்ட வேளாண் துணை இயக்குனர் வடிவேலு தலைமை வகித்தார். 

இதில் தேசிய உணவு பாதுகாப்பு திட்ட மாவட்ட ஆலோசகர் அரசப்பன் பேசுகையில், அரிசி, கோதுமை உணவுகளில் கார்போஹைட்ரேட் மட்டுமே அதிகம் உள்ளது. மனிதனின் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஊட்டச்சத்து, வைட்டமின், தாது உப்பு, சோளம், கம்பு, ராகி, சாமை, தினை, வரகு, குதிரைவாலி உள்ளிட்ட சிறு தானியங்களில் அதிகம் உள்ளது. இதனை நாம் அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் என்றார்.

சோளம் கோ -30, கம்பு ரகங்கள் பயிரிட அறிமுகப்படுத்தப்பட்டது. சிறுதானிய சாகுபடிக்கு கோடை உழவு, விதை நேர்த்தி, ஊட்டமேற்றிய தொழு உரம், உயிர் உரம், ஊட்டச்சத்து, உயிரியல் பூச்சிக்கொல்லி பயன்பாடு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. சிறுதானிய சாகுபடி குறித்த விளக்கக் கையேடு வெளியிடப்பட்டது. 

பொங்கலூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் பொம்முராஜ், உணவு பாதுகாப்புத்துறை தொழில் நுட்ப உதவியாளர் கிருத்திகா, உதவி வேளாண் அலுவலர் ரஞ்சித்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Similar News