உள்ளூர் செய்திகள்
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில்ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 36). ஆட்டோ டிரைவர். ஜெயபால் தனது மனைவி நந்தினி மற்றும் 2 மகள்களுடன் அதே பகுதியில் வசித்து வந்தார். கடந்த ஒரு ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த ஜெயபால், 2 நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
நேற்று அதிகாலை கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட ஜெயபால், ஆஸ்பத்திரி பொது வார்டில் உள்ள கழிப்பறையில் நைலான் கயிறு மூலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.