உள்ளூர் செய்திகள்
ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் ஆய்வு
முறைகேடுகள் நடந்ததாக புகார் வந்ததையடுத்து ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் முறைகேடு நடந்ததாக புகார் வந்த நிலையில் துறையின் அமைச்சர் சாய். ஜெ. சரவணன்குமார் அதிரடி ஆய்வு மேற்கொண் டார்.
புதுவை அண்ணா நகரில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (டி.ஆர்.டி.ஏ.) அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்த அலுவலகம் மூலம் மத்திய, மாநில அரசுகள் கிராமப்புற வளர்ச்சி திட்டத்திற்கு ஒதுக்கும் நிதிகளைக் கொண்டு கிராம உள்கட்ட மைப்பு, கிராமப்புற வேலை வாய்ப்பு, சுகாதாரம், அடிப் படை கல்வி, மருத்துவம், சமூகப் பாதுகாப்பு, மகளிர் மேம்பாடு, கைவினைத் தொழில் மேம்பாடு போன்ற சமூகப் பொருளாதார வளர்ச்சி திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கிய நிதியை புதுவை மாவட்ட வளர்ச்சி முகமை அலுவலகம் முறையாக செலவு செலவு செய்யவில்லை என்றும், கழிவறைகள் கட்டுதல் உள்ளிட்ட திட்டங்களில் முறைகேடுகள் நடந்திருப்ப தாகவும் புதுவை கவர்னர் தமிழிசை செவுந்தரராஜன், தலைமை செயலாளர் அஸ்வின் குமார் ஆகியோருக்கு புகார் வந்தது. இந்த புகார் சமூக வலைத்தளத்திலும் பரவியது.
இந்த நிலையில் இத்துறையின் அமைச்சர் சாய். ஜெ. சரவணன்குமார் புதுவை அண்ணாநகரில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்த அதிகாரிகளிடம், கடந்த 10 மாதத்தில் மேற் கொள்ளப்பட்ட பணிகள், திட்டங்கள் மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கிய நிதிகள் குறித்தும் கிராமப்புற வளர்ச்சிக்கு என்னென்ன திட்டங்கள் ஒதுக்கப்பட்டுள் ளது குறித்தும், குறிப்பாக கழிவறைகள் கட்டுவதில் முறைகேடுகள் நடந்துள் ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தார். திட்டங்கள் குறித்த கோப்புகளையும் பார்வையிட்டார்.
அமைச்சர் சாய். ஜெ. சரவணன்குமார் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட சம்பவம் அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.