உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் மாவட்ட விவசாயிகளின் குறைதீர் கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.

விழுப்புரம் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்: கலெக்டர் பழனி உறுதி

Published On 2023-08-19 07:45 GMT   |   Update On 2023-08-19 07:45 GMT
  • ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.
  • விவசாய பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில்  நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட விவசாயிகள், திண்டிவனத்தில் விதை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். மரவள்ளி தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுர் அணைக்கட்டை சுற்றி மண் அணைப்பு செய்திருக்கும் இடத்தில் மண் சரிவு வராமல் பாதுகாக்க பனைக்கன்றுகள் நட வேண்டும். விவசாயிகளின் பாரம்பரிய நெல் விதைகளை வேளாண் உற்பத்தியா ளர்கள் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து ஏரிகள், குளங்கள், குட்டைகள் போன்றவற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகள், அரசாங்க புறம்போக்கு இடங்கள், சுடுகாடு, வழிப்பாதை போன்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். மாதந்தோறும் விவசாயிகள் தெரிவிக்கும் அனைத்து கோரிக்கைகளும் உரிய அலுவலர்கள் வாயிலாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. தற்பொழுது விவசாயிகள் வைத்த கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, விவசாயிகளின் கோரி க்கைகள் நிறைவேற்ற ப்படும் என மாவட்ட கலெக்டர் பழனி விவசாயிகளிடம் உறுதியளித்தார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் சரஸ்வதி, வேளாண்மை இணை இயக்குநர் சண்முகம், மேற்பார்வை பொறியாளர், தமிழ்நாடு மின்சார வாரியம் லட்சுமி, இணை பதிவாளர் கூட்டுறவு சங்கம் யசோதா தேவி, மேலாண்மை இயக்குநர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இளஞ்செல்வி, செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை ஷோபனா, வேளாண்மை துணை இயக்குநர் பெரியசாமி, விவசாய பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News