உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் பச்சையம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

மாரண்டஹள்ளி பச்சையம்மன் கோவிலில் 18-ம் ஆண்டு கும்ப பூஜை

Published On 2023-02-08 15:36 IST   |   Update On 2023-02-08 15:36:00 IST
  • கும்ப பூஜையில் ஏழு வகையான உணவு, பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகளை வைத்து, பம்பை வாத்தியங்கள் முழுங்க பூஜை நடைபெற்றது.
  • கும்ப பூஜைக்கு சுற்று வட்டார பகுதிகளைச் சார்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மார ண்டஹள்ளி பச்சையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசத்தில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டி பச்சையம்மனின் 18-ம் ஆண்டு தைப்பூச தேர்த்திருவிழா கடந்த வெள்ளிக் கிழமை முதல் தொடங்கியது. இதில் தைப்பூச தினத்தன்று பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பச்சையம்மன் திருத்தேர் வீதி உலா நடைபெற்றது.

இதனை தொடர்ந்து விழாவில் இறுதி நாளான நாளை கிடா வெட்டுவதற்கு முன், இன்று பச்சையம்மனுக்கு கும்ப பூஜை நடைபெற்றது.

இந்த கும்ப பூஜையில் ஏழு வகையான உணவு, பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகளை வைத்து, பம்பை வாத்தியங்கள் முழுங்க பூஜை நடைபெற்றது.

இந்த கும்ப பூஜைக்கு சுற்று வட்டார பகுதிகளைச் சார்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

மேலும் இந்த கும்ப பூஜையை தொடர்ந்து இரவு 12 மணிக்கு 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு, நாளை காலை முதல் மாலை வரை பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

Tags:    

Similar News