தமிழ்நாடு
சென்னை புத்தகக் காட்சியில் 20 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை
- டிசம்பர் மாதம் 27-ந்தேதி புத்தகக் காட்சி தொடங்கியது.
- 17 நாட்கள் நடைபெற்ற புத்தகக் காட்சி நேற்றுடன் நிறைவு.
48-வது சென்னை புத்தக கண்காட்சி கடந்த மாதம் 27-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து 17 நாட்களாக நடைபெற்ற இந்த புத்தக காட்சி நேற்றுடன் முடிவடைந்தது. இந்த புத்தகக் காட்சிக்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகை தந்ததாகவும், 20 கோடி ரூபாய்க்கு மேல் புத்தகங்கள் விற்பனையானதாகவும் பபாசி தலைவர் சேது சொக்கலிங்கம் தெரிவித்தள்ளார்.