தமிழ்நாடு
கார் ரேஸில் வென்ற அஜித் குமாருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து
- கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது.
- அஜித் குமாரின் வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மேலும், மகிழ்ச்சியில் அஜித் குமார் சக அணியினருடன் துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடினார். இவரது வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அஜித் குமாருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரஜினி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
என் அன்பான அஜித்குமாருக்கு வாழ்த்துகள். நீங்க சாதிச்சிட்டீங்க. கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார். லவ் யூ.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.