தமிழ்நாடு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு- பாஜக நிர்வாகி போக்சோவில் கைது

Published On 2025-01-13 12:01 IST   |   Update On 2025-01-13 13:03:00 IST
  • மதுரையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் பாஜக மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷா மீது போக்சோவில் வழக்கு தொடரப்பட்டது.
  • சிறுமியின் செல்போன் எண்ணுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி பாஜக நிர்வாகி எம்.எஸ்.ஷா பாலியல் தொந்தரவு என புகார் எழுந்தது.

பாஜக மாநில பொருளாதார பிரிவு தலைவராக பதவி வகித்து வருபவர் எம்.எஸ்.ஷா. இவர் மீது 15 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவி ஒருவரின் தந்தை மதுரை மாநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

அதில் தனது மகளின் செல்போனுக்கு பா.ஜ.க. பிரமுகர் எம்.எஸ்.ஷா தொடர்ந்து ஆபாசமான உரையாடல்களை அனுப்பி வந்துள்ளதாகவும், இதுபற்றி தனது மகளிடம் கேட்டபோது எம்.எஸ்.ஷா அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிய வந்தது.

மேலும், புகார் கொடுத்தவரின் மனைவி பா.ஜ.க. பிரமுகர் இருக்கும் இடத்திற்கு மகளை தனியாக அழைத்துச் சென்று தங்க வைத்ததாகவும், வாட்ஸ்அப் மூலம் அவர் கூப்பிடும் இடத்திற்கு சென்று அவருடன் தங்கி னால் ஸ்கூட்டர், புதிய ஆடைகள் வாங்கித் தருகிறேன், கடனை அடைக்கி றேன் என ஆசை வார்த்தை களை கூறி அழைத்து சென்று பாலியல் துன்பு றுத்தல் அளித்துள்ளார். இதற்கு தனது மனைவியும் உடந்தையாக இருந்து வந்துள்ளார் என புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் பா.ஜ.க. நிர்வாகி எம்.எஸ்.ஷா மீதும் மற்றும் பள்ளி மாணவியின் தாய் இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பா.ஜ.க. மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷா இன்று மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Tags:    

Similar News