உள்ளூர் செய்திகள்

திருப்பூரில் போலி சித்தா டாக்டர் வாங்கிய மருந்துகளை தயாரிக்கும் நிறுவனத்தை சோதனை செய்ய கலெக்டர் உத்தரவு

Published On 2023-02-16 12:50 IST   |   Update On 2023-02-16 12:50:00 IST
  • மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் கனகராணி மற்றும் குழுவினர் மையத்தை ‘சீல்’ வைத்தனர்.
  • சித்தா அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் :

திருப்பூர் - அவிநாசி ரோடு, ஆஷர் நகரில் செயல்பட்டு வந்த தனியார் நலவாழ்வு மையத்தில் சித்த வைத்தியம் பார்த்து மருந்துகள் வழங்கப்படுவதாகவும், 'யூடியூப்' மூலம் மருத்துவம், மருந்துகள் குறித்து எடுத்துரைப்பதாக, கலெக்டர் வினீத்துக்கு புகார் வந்தது. இதையடுத்து மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் கனகராணி மற்றும் குழுவினர் மையத்தை 'சீல்' வைத்தனர்.

அங்கிருந்த நிர்வாகி முரளிக்குமாரிடம் 'வீடியோ' வாக்குமூலம் பெற்றனர். இந்நிலையில் அம்மையத்தின் செயல்பாடு, சிகிச்சை அளிக்கும் முறை, நிர்வாகி பெற்றுள்ள சான்றிதழ் குறித்த விபரங்களை கலெக்டரிடம் மருத்துவ குழுவினர் அறிக்கையாக சமர்ப்பித்தனர்.

முரளிக்குமார் சித்தா மருந்துகளை பரிந்துரைத்துள்ளதால், எங்கிருந்து அவர் மருந்துகளை வாங்கினார், தயாரித்து அனுப்பும் நிறுவனம் லைசன்ஸ் பெற்றதா என்பது குறித்து, திருப்பூர் மாவட்ட சித்தா அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News