உள்ளூர் செய்திகள்

காரிமங்கலத்தில் நாளை நடைபெறும் தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்காக பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணியினை கட்சியின் மாவட்ட செயலாளர்கள் பழனியப்பன், தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்த படம்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் கூட்டத்திற்கு பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரம்

Published On 2023-09-25 15:44 IST   |   Update On 2023-09-25 15:44:00 IST
  • தருமபுரி காரிமங்கலத்தில் அமைசைசர் உதயநிதி ஸ்டாலி்ன் கலந்து கொள்ளும் கூட்ட மேடையை திமுக மாவட்ட செயலாளர்கள் ஆய்வு செய்தனர்
  • 1000 பேர் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல்வீ ரர்கள் ஆலோசனைக் கூட்டம் காரிமங்கலத்தில் நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.

இந்த கூட்டத்திற்காக காரிமங்கலம்-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10,000 பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரவு, பகலாக நடைபெறும் இந்த பணிகளில் நூற்றுக்க ணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்ச ருமான பழனி யப்பன், தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் சுப்பிரமணி, ஆகியோர் நேற்று இரவு திடீர் ஆய்வு செய்தனர். இதில் கூட்ட மேடை மற்றும் இளைஞர் அணியினர் அமரும் இருக்கைகள் ஆகியவற்றை பார்வையிட்டனர்.

இந்த ஆய்விள் போது முன்னாள் எம்.பி. சேகர், மாவட்ட அவைத்தலைவர் மனோகரன், மாவட்ட பொருளாளர் முருகன், மாவட்ட துணை செயலாளர் வக்கீல் மணி, பேரூராட்சி தலைவர் மனோகரன், பேரூராட்சி துணைத் தலைவர் சீனிவாசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் வெங்கடேஸ்வரன், சிவகுரு, கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் கோபால், அன்பழகன், சந்திரமோகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கௌதம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Similar News