உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாகனங்கள் மூலம் புத்தகங்கள் அனுப்பும் பணி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்

Published On 2022-06-12 14:49 IST   |   Update On 2022-06-12 16:10:00 IST
  • கோடை விடுமுறைக்கு பிறகு அரசு பள்ளிகள் நாளை திறக்கப்படுகின்றன.
  • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கள்ளக்குறிச்சி:

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கி வருகிறது.

இதற்காக தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தில் இருந்து பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

அவ்வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 1- ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அரசு பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில், புத்தகங்கள் வந்து சேர்ந்துள்ளன. அவற்றை பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

Tags:    

Similar News