உள்ளூர் செய்திகள்

கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம்- கமிஷனர் சங்கர்ஜிவால் திறந்து வைத்தார்

Published On 2023-04-06 12:11 GMT   |   Update On 2023-04-06 12:12 GMT
  • பொதுமக்களின் புகார்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுரை வழங்கினார்.
  • கோயம்பேடு, புழல், நீலாங்கரை, தரமணி, மீனம்பாக்கம் ஆகிய அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களையும் திறந்து வைத்தார்.

சென்னை:

சென்னையில் புதிதாக கோட்டூர்புரம், கோயம்பேடு, புழல், நீலாங்கரை, தரமணி, மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் 6 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி அபிராமபுரம் போலீஸ் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை கமிஷனர் சங்கர்ஜிவால் இன்று காலை திறந்து வைத்தார். அப்போது அவர், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர், போலீசாரை வாழ்த்தி பணிகள் சிறக்கவும், பொதுமக்களின் புகார்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுரை வழங்கினார்.

இதே போல் கோயம்பேடு, புழல், நீலாங்கரை, தரமணி, மீனம்பாக்கம் ஆகிய அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களையும் அவர் திறந்து வைத்தார். இதில் இணை கமிஷனர் திஷா மிட்டல், மயிலாப்பூர் துணை கமிஷனர் ரஜத் சதுர்வேதி, உதவி கமிஷனர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News