உள்ளூர் செய்திகள்
கோவளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சீரான மின் வினியோகத்துக்கு ஒரு வாரத்தில் நடவடிக்கை- செந்தில் பாலாஜி
- மாணவர்கள் படிப்பதால் உடனடியாக மின்மாற்றி அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா என சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி கேள்வி எழுப்பினார்.
- ஒரு வாரத்திற்குள் புதிய மின்மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.
சென்னை:
கோவளம் அரசு மேல் நிலைப்பள்ளியில் சீரான மின்சார விநியோகம் குறித்து ஆய்வு செய்து ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், கோவளத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சீரான மின்சாரம் விநியோகம் செய்யப்படுவது இல்லை என்றும், மாணவர்கள் படிப்பதால் உடனடியாக மின்மாற்றி அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா எனவும் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவளம் அரசு மேல்நிலைப்பள்ளி மின்சார வினியோகம் குறித்து துறை அலுவலர்களை நேரடியாக அனுப்பி ஆய்வு செய்து பிரச்சனை இருக்கும் பட்சத்தில் ஒரு வாரத்திற்குள் புதிய மின்மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.