உள்ளூர் செய்திகள்

பிரையண்ட் பூங்காவில் லானட்டா வகை குறிஞ்சி செடிகளை நடும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

கொடைக்கானல்: பிரையண்ட் பூங்காவில் புதிய குறிஞ்சி தோட்டம் அமைக்கும் தோட்டக்கலைத்துறை

Published On 2023-03-27 13:35 IST   |   Update On 2023-03-27 13:35:00 IST
  • இந்த செடிகள் 3 ஆண்டுகளில் பெரிதாக வளர்ந்து சுற்றுலா பயணிகளை கவரும் என்று பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
  • தோட்டக்கலை கல்வி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும்.

கொடைக்கானல்:

கொடைக்கானலில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இதற்காக இங்குள்ள பிரையண்ட் பூங்காவில் பல்வேறு நாடுகளில் உள்ள மலர் நாற்றுகளை நட்டு பராமரிக்கும் பணியில் தோட்டக்கலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக கொடைக்கானலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்களும் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள மலைப்பகுதிகளில் லானட்டா என்ற புதிய வகை குறிஞ்சி மலர்கள் கடந்த ஜனவரி மாதம் பூத்து குலுங்கியது. இதனைத் தொடர்ந்து தோட்டக்கலைத்துறை மற்றும் பூங்கா நிர்வாகம் சார்பில் அந்த மலர் நாற்றுகளை சேகரித்து ஒரு மாத காலம் பதியமிட்டு பராமரித்து வந்தது.

அவை வேர் பிடிக்க தொடங்கியதை தொடர்ந்து அந்த செடிகள் பிரையண்ட் பூங்காவில் உள்ள குறிஞ்சி தோட்டத்தில் நடப்பட்டு வருகிறது. இந்த செடிகள் 3 ஆண்டுகளில் பெரிதாக வளர்ந்து சுற்றுலா பயணிகளை கவரும் என்று பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் தோட்டக்கலை கல்வி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும் என தெரிவிக்க ப்பட்டுள்ளது.

Tags:    

Similar News