உள்ளூர் செய்திகள்
உலக புகையிலை எதிர்ப்பு தின பேரணி
பெரம்பலூர் ரோவர் வேளாண்மை கல்லூரி சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தின பேரணி நடைபெற்றது
பெரம்பலூர்,
பெரம்பலூர் ரோவர் வேளாண்மை கல்லூரி சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தின பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரோவர் கல்வி நிறுவனங்களின் மேலாண் தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். துணை தலைவர் ஜான்அசோக் வரதராஜன், கல்லூரி முதல்வர் வஹாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவல்துறை ஏ.டி.எஸ்.பி.மதியழகன் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பாதாகைகளை ஏந்தி சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பேரணி பாலக்கரை வழியாக சென்று புது பஸ்ஸ்டாண்டில் முடிவடைந்தது. இதில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ராமதாஸ், நிர்வாக அலுவலர் ஜெயசீலன், அலுவலக மேலாளர் திருநாவுக்கரசு மற்றும் 300-க்கு மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.