உள்ளூர் செய்திகள்
சின்னசேலம் அருகே அரசு பஸ்சை வழிமறித்து ரகளை-வாலிபர் கைது
- சின்னசேலம் அருகே அரசு பஸ்சை வழிமறித்து ரகளை-வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- பஸ்சில் பயணம் செய்தவர்கள் கீழே இறங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
களளக்குறிச்சி:
சின்னசேலத்தில் இருந்து பாரஸ்ட் வழியாக கருந்த லாக்குறிச்சிக்கு செல்லும் தார் சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்து இருக்கி றது. இந்த சேதமடைந்த சாலையில் புதியதாக தார் சாலை அமைக்க வேண்டும். என்று அதே பகுதியை சேர்ந்த வாலிபர் சாமிதுரை என்பவர் சின்னசேலத்தில் இருந்து நைனார்பாளையம் வழியாக வி. மாமந்தூர் செல்லும் அரசு பஸ்சை மறித்து ரகளை செய்தார். இதனால் பஸ்சில் பயணம் செய்தவர்கள் கீழே இறங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் போக்குவரத்தில் பயணம் செய்தவர்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவல் அறிந்த போலீசார் சாமிதுரையை கைது செய்து பஸ்சை அனுப்பி வைத்தனர்.