உள்ளூர் செய்திகள்

கந்தர்வகோட்டை அருகே ரூ.10 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு

Published On 2022-12-23 13:20 IST   |   Update On 2022-12-23 13:20:00 IST
  • ரூ.10 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்களை இந்து சமய அறநிலையத்துறையினர் மீட்டனர்
  • பக்தர்கள் கோயில் நிலங்களை மீட்க இந்து சமய அறநிலையத் துறையினருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

கந்தர்வகோட்டை :புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் நொடியூர் கிராமத்தில் உள்ள ஆதிநாதர் மற்றும் ஆதி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 152 ஏக்கர் நிலங்கள் பல ஆண்டுகளாக தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோயில் நிலங்களை மீட்க இந்து சமய அறநிலையத் துறையினருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். கோவில் நிலங்களை மீட்க ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்களுக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை உதவி இயக்குனர் அனிதா அறிவுறுத்தலின்படி, புதுகை திருக்கோவில் நிர்வாக அலுவலர் சந்திரசேகரன், சரக அலுவலர் திவ்யபாரதி, சண்முகசுந்தரம், தனி தாசில்தார் ரத்னாவதி மற்றும் கோவில் அலுவலர்கள் அதிரடியாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ரூ.10 கோடி மதிப்புள்ள, 152 ஏக்கர் நிலங்களை மீட்டு இந்து சமய அறநிலையத்துறை சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை நட்டனர்.

Tags:    

Similar News