உள்ளூர் செய்திகள்
மின்சாரம் தாக்கி வட மாநிலத்தை தொழிலாளி பலி
- தோல் தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தோல் தொழிற்சாலையில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த நசீப் கான் (வயது 22) என்பவர் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் வழக்கம்போல் நசீப் கான் பணியில் ஈடுபட்டிருந்த போது தொழிற்சாலை இயந்திரத்தை இயக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட நசீப்கான் மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ராணிப்பேட்டை தனியார் மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் நசீப்கான் வரும் வழியி லேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.