உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

கொடைக்கானலில் 3.3 ஹெக்டேரில் அந்நிய மரங்கள் அகற்றம் மாவட்ட வன அலுவலர் தகவல்

Published On 2022-08-12 10:28 IST   |   Update On 2022-08-12 10:28:00 IST
  • நீதிமன்ற உத்தரவின் பேரில் முதல்கட்டமாக 100 ஹெக்டேர் பரப்பளவில் அந்நிய மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • கொடைக்கானல் வனப்ப குதியில் 3.3 ஹெக்டேர் பரப்பளவில் அந்நிய மரங்கள் அகற்றப்பட்டதாக மாவட்ட வன அலுவலர் தெரிவித்தார்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் வனப்ப குதியில் 3.3 ஹெக்டேர் பரப்பளவில் அந்நிய மரங்கள் அகற்றப்பட்டதாக மாவட்ட வன அலுவலர் தெரிவித்தார்.

இது குறித்து கொடைக்கா னலில் மாவட்ட வன அலு வலர் திலீப் கூறுகையில்,

கொடைக்கானலில் அந்நிய மரங்களான யூக்கலி, ரப்பர், வாட்டில் மரங்கள் 8 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் உள்ளன. இந்த மரங்களால் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன.

நீதிமன்ற உத்தரவின் பேரில் முதல்கட்டமாக 100 ஹெக்டேர் பரப்பளவில் அந்நிய மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு ளளது. இதில் 3.30 ஹெக்டேர் அளவில் அந்நிய மரங்கள் அகற்றப்பட்டு ள்ளன. அந்நிய மரங்கள் அகற்றப்பட்ட இடங்களில் சோழா மகக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.

பேத்துப்பாறை பகுதியிலுள்ள அருவியில் யானை நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால் அந்த பகுதியை சுற்றுலா தலமாக அறிவிப்பது குறித்து ஆலோ சிக்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் அப்ப குதியில் சூரிய மின்வேலி அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

பல மாதங்களாக பியர் சோழா அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வது இல்லை. அந்த இடத்தை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

கொடைக்கானல் மலை ப்பகுதியில் சுமார் 2ஆயிரம் பழங்குடியின மக்கள் உள்ளனர். அவர்கள் வசிக்கும் 3 கிராமங்களில் ரூ.16 லட்சம் செலவில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இத ற்காக அரசு ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தத் தொகையில் பழங்குடி இன மக்களுக்கு வீடுகள், சுகாதார வளாகம், சாலை வசதி, சூரிய மின் விளக்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு ள்ளன. கொடைக்கானல் வனப்பகுதியில் வன விலங்குகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அது தொடர்பான விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News