புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை மே மாத இறுதிக்குள் முடிக்க கலெக்டர் அறிவுறுத்தல்
- இளையான்குடி புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை மே மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
- கட்டுமான நிலைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூரா ட்சிக்குட்பட்ட பகுதி களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 18 வார்டுகளில் தினசரி சேகரமாகும். 5.100மெட்ரிக் டன் குப்பைகளை பேரூ ராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள 2.5 ஏக்கர் பரப்ப ளவில் அமைந்துள்ள வளமீட்புப் பூங்காவில் சேகரிக்கப்படுகிறது.
அதன்மூலம் 20 ஆண்டுகளுக்கு மேலான பழைய திடக்கழிவுகளை உரிய அகழ்வு முறையில் குப்பைகளை தரம் பிரிப்பதற்காக ரூ.44.27 லட்சம் மதிப்பீட்டில் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
அந்த பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு குப்பைகளில் இருந்து பிரிக்கப்பட்ட பழைய திடக் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்தவும், திடக்கழிவுகளில் இருந்து தரம் பிரிக்கப்பட்ட கண்ணாடி பொருட்கள், தோல் பொருட்கள் ஆகிய வைகளை மறுசுழற்சிக்கு அனுப்பி உரிய பணிகளை தரமான முறையில் மேற்கொள்ள அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப் பட்டது.
இளையான்குடி பேரூ ராட்சிக்குட்பட்ட பகுதி களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையிலும், மேம்பாட்டு வளர்ச்சிகாகவும் இந்த பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-22-ன் கீழ் புதிய பஸ் நிலையம் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் கட்ட 22.3.2022 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் தொடர்பா கவும், கட்டுமான நிலைகள் குறித்தும் ஆய்வு செய்யப்ப ட்டது. பஸ் நிலைய சுற்றுச்சுவரின் வெளி ப்புறமும் நெடுஞ்சாலை வரை பேவர் பிளாக் கல் பதிக்கும் பணியும் மேற்கொ ள்வதற்கு அலுவலர்களுக்கு அறிவு றுத்தப்பட்டது. வருகிற மே மாதம் இறுதி க்குள் இந்த கட்டுமானப் பணிகளை தரமான முறையில் விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிக்கு கொண்டு வர அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இளையான்குடி பேரூராட்சிப் பகுதிக்கென புதிய தீயணைப்பு நிலைய கட்டிடம் அமைப்பதற்காக புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலையம் அருகில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 1 ஏக்கர் இடம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் நேரில் கள ஆய்வுகளும் மேற்கொ ள்ளப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வுகளின் போது உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ராஜா, இளநிலைப் பொறியாளர் சந்திரமோகன், இளை யான்குடி பேரூராட்சி செயல் அலுவலர் கோபி உள்பட பலர் உடனிருந்தனர்.