உள்ளூர் செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

20 ஊர்களில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

Published On 2022-06-16 10:38 GMT   |   Update On 2022-06-16 10:43 GMT
  • கூடுதலாக புதிதாக 20 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • காவல் நிலையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

சென்னை:

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல் துறை சார்பில் அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் உருவாக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இப்போது கூடுதலாக புதிதாக 20 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த காவல் நிலையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.அதன்படி வளசர வாக்கம், போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி, வண்டலூர், காட்பாடி, திருவண்ணாமலை, ஊரகம், திட்டக்குடி, கரூர்ஊரகம், கோட்டைப்பட்டினம், ஒரத்தநாடு, முத்துப்பேட்டை, மேட்டுப்பாளையம், பெருந்துறை, ஊத்தங்கரை, ஊமச்சிக்குளம், திண்டுக்கல் ஊரகம், பெரியகுளம், முது குளத்தூர், சேரன்மாதேவி, புளியங்குடி ஆகிய 20 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் புதிதாக திறக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News