உள்ளூர் செய்திகள்
அசோக் நகர் அருகே முதியவரிடம் செல்போன் பறிப்பு
- வாலிபர் திடீரென பாலசுப்பிரமணியன் கையில் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டார்.
- அசோக் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை எம்.ஜி.ஆர் நகர் பெரியார் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது53) கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்.
இவர் இன்று காலை 6மணி அளவில் அசோக் நகர் 9-வது அவின்யூவில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது "ரெயின் கோட்" அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம வாலிபர் திடீரென பாலசுப்பிரமணியன் கையில் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டார்.
இது குறித்து அசோக் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.