உள்ளூர் செய்திகள்

ஏ.டி.எம். எந்திரத்தில் கிடந்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்

Published On 2024-02-09 12:46 IST   |   Update On 2024-02-09 12:46:00 IST
  • போலீசார் பணத்தின் உரிமையாளர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
  • பணத்தை நேர்மையாக போலீஸ் நிலையத்திற்கு வந்து ஒப்படைத்த ஆனந்தனை பொதுமக்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.

சங்கராபுரம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன்(40). ஆட்டோ ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று அருகில் உள்ள தனியார் பள்ளிக்கு மாணவர்களின் பெற்றோர்களை ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது ஆட்டோவில் வந்த பயணி ஒருவர் அவரது ஏ.டி.எம்., கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க ஆனந்தன் சென்றுள்ளார். அப்போது ஏ.டி.எம்., எந்திரத்தில் ரூ.10 ஆயிரம் பணம் கிடந்தது. இதைப் பார்த்த அவர் உடனே வெளியே வந்து அங்கிருந்த பொது மக்களிடம் விசாரித்துள்ளார். அங்கிருந்த யாரும் சரியான தகவல் தெரிவிக்கவில்லை.

பணத்தின் உரிமையாளர் யார் என்றும் தெரியவில்லை. இதனால் ஆனந்தன் அந்த பணத்தை எடுத்துக் கொண்டு சங்கராபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரனிடம் ஒப்படைத்தார். இது குறித்து போலீசார் பணத்தின் உரிமையாளர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பணத்தை நேர்மையாக போலீஸ் நிலையத்திற்கு வந்து ஒப்படைத்த ஆனந்தனை போலீசார் மற்றும் பொதுமக்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News